சிலுவைப் பாதை

சிலுவைப் பாதை நிலை 1: திவ்விய இயேசுவே உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றி செலுத்துகிறோம் அது ஏனெனில் உமது பரிசுத்த பாரமான சிலுவையால் உலகத்தை மீட்டு இரட்சித்தீர். இயேசுவை சிலுவைச் சாவுக்குத் தீர்ப்பிடுகிறேன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசை லட்சியம், வசதியாக சுகமாக வாழவேண்டும், அதற்காக எதுவேண்டுமாலும் செய்யலாம் போன்ற சித்தாந்தங்களின் ஒரு பிம்பமாகவே பிலாத்து நீதி இருக்கையில் அமர்ந்திருந்தான். ஒருவனின் இலக்கை அடைய, அல்லது வெற்றிபெற ‘உண்மை’ தர்மசங்கடமான ஒரு தடைக்கல் என்பது அவனது மதிப்பீடு. உண்மை என்பதே ஒருவனின் வாழ்க்கைக்கு ஒத்துவராத ஒரு சித்தாந்தம் என்பது அவனது அசைக்கமுடியாத கோட்பாடு. அதனால்தான் “உண்மையா! அது என்ன” என்று இயேசுவிடம் கேட்டான். இத்தகைய சித்தாந்தங்களின் வெளிப்பாடுதான் இயேசுவை சிலுவைச்சாவுக்குக் கையளித்த அவனது தீர்ப்பு. இது ஒருபுறம் இருக்க இயேசுவின் சிலுவைச் சாவைப்பற்றி திருச்சபை விசுவசித்து அறிக்கையிடுவது என்ன தெரியுமா? கிறிஸ்துவின் சிலுவைச்சாவில் பிலாத...